பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றரை ஆண்டில் பதிவாகும் மழை அளவு ஒரே நாளில் பெய்ததால் துபாய் நகரம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
ஏராளமான சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் துபாய் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால், தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
ஷாப்பிங் மால்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் போன்றவற்றில் மழை நீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை நீட்டிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.