அமெரிக்காவில் விமானத்தில் பறந்த போது பயணிகள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். டெக்சாஸில் இருந்து மிச்சிகனுக்கு 30 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது.
சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வந்தபோது வானம் இருளில் மூழ்கியதை விமானத்தில் இருந்தபடியே பயணிகள் பார்த்தனர்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்கும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மக்கள், மலைமேடுகளில் திரண்டனர்.