கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள நம்புலா மாகாணத்தின் லும்பா என்ற இடத்தில் இருந்து மொசாம்பிக் தீவுக்கு அளவுக்கு அதிகமான130 பேரை ஏற்றிச் சென்ற படகு கடலில் திடீரென தாக்கிய பேரலையில் சிக்கி நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் சிறார்கள் உள்பட 94 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் .
இவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 26 பேரை காணவில்லை. லும்பாவில் கலரா தொற்று பரவுவதாக ஏற்பட்ட பீதியில் மீன் பிடி படகில் ஏறி இவர்கள் தப்பிச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.