உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
சமூக நல்லிணக்கம், தனி நபர் வருமானம், சுகாதாரம், கருத்துரிமை, ஊழல் இல்லா நிர்வாகம் போன்றவற்றை அளவுகோளாக கொண்டு, ஐ.நா. நிதி உதவியுடன் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பின்லாந்து முதல் இடமும், டென்மார்க் 2-வது இடமும், ஐஸ்லாந்து 3-வது இடமும் பிடித்துள்ளன.
இந்த பட்டியலில், அமெரிக்கா 23-வது இடத்திலும், இந்தியா 126-வது இடத்திலும் உள்ள நிலையில், உள்நாட்டு போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட லெபனானும், ஆப்கானிஸ்தானும் கடைசி 2 இடங்களில் உள்ளன.