புவியின் வட துருவத்தில் உள்ள ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் பகுதியில் டிசம்பர் மாதத்திற்கு பிறகு நான்காவது முறையாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு புவியில் பிளவு ஏற்பட்டு எரிமலை குழம்பான லாவாவும், தீப்பிழம்புகளிலிருந்து கரி தூசியும் வெளியேறி வருகிறது.
இதனால், அருகிலுள்ள கிரிண்டாவிக் பகுதியில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். சாலைகளில் வழிந்தோடிய லாவாவால் தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.