காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளர்கள் மருத்துவமனையில் பதுங்கியிருந்து சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மருத்துவ வசதிகளை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில், அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறும் செயல் என காஸா கண்டனம் தெரிவித்துள்ளது.