வசந்த காலம் நெருங்குவதை அடையாளப்படுத்தும் வகையில், ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரான வலென்சியாவில், ஃபல்லாஸ் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் போரின் கொடிய முகத்தை அடையாளப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட சிற்பங்கள் வைக்கப்பட்டன.
போரின் ஆபத்தை வெளிப்படுத்தும் வகையில், வான வெடிகளை ஏவி, ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதலை நினைவுகூறி புகை மண்டலத்தை உருவாக்கினர்.
இரண்டு அமைதி புறாக்கள் வானில் பறந்தபடி எதிர்எதிரே சண்டையிடுவது போன்ற சிற்பம் பலரது கவனத்தை ஈர்த்தது. கண்காட்சியில் இஸ்ரேல் - ஹமாஸ் போர், ரஷ்யா - உக்ரைன் போரை அடையாளப்படுத்தும் உருவ பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.