சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் அதிபர் மாளிகை அருகே உள்ள உணவகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அதிக கூட்டம் கூடக்கூடிய சைல் ஹோட்டலில் நடந்த இந்த தாக்குதலுக்கு அல்கய்தாவுடன் தொடர்புடைய அல் ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
ஆயுதம் தாங்கிய கும்பல் உணவகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் தாக்குதலில் உணவக ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.