பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்ற டைட்டானிக் கப்பலை போலவே அச்சு அசலாக இன்னொரு கப்பலை கட்டப் போவதாக ஆஸ்திரேலிய பெருங்கோடீஸ்வரர் கிளைவ் பால்மர் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக்-டூ என்ற அந்த கப்பல், இரண்டாயிரத்து 300 பேர் பயணிக்கும் வகையில், 835 அறைகளுடன் கட்டப்பட உள்ளதாகவும், 2027-ஆம் ஆண்டு முதல் கடல் பயணத்தை தொடங்கும் எனவும் பால்மர் கூறியுள்ளார்.
1912-ஆம் ஆண்டு பனிப்பாறை மீது மோதி கடலில் மூழ்கிய 'டைட்டானிக்' கப்பலை காட்டிலும் இந்த கப்பல் தரமாக கட்டப்படும் எனவும் பால்மர் தெரிவித்துள்ளார்.