மெக்சிகோ நாட்டில் எரிமலை சீற்றம் சுற்றுவட்டார கிராமங்களை பாதிக்காமல் இருப்பதற்காக, மக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
பியூப்லா நகர் அருகே மலைத் தொடர் முன்பு திரண்டவர்கள், பூ, பழம், இனிப்பு வகைகளை தட்டில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி உருக்கமுடன் வழிபட்டனர்
சீற்றத்துடன் காணப்படும் எரிமலையை நோக்கி சாம்பிராணி புகையை ஏந்தி சிறிது தூரம் நடந்து சென்று தீபாரதனை காட்டினர்.