தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமது ஆதரவாளர்களை விடுதலை செய்வேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபோது, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் கூறியதை நம்பி அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஆயிரத்து 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 500 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த முறை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் முதல் வேளையாக மெக்சிகோ உடனான எல்லையை மூடிவிட்டு, பிறகு நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக சிறை தண்டனை அனுபவித்துவருபவர்களை விடுவிப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார்.