உலக கோடீஸ்வரர்களில் முதலிடம் வகித்துவந்த டெஸ்லா நிறுவன அதிபர் எலன் மஸ்க், கடந்த 3 மாதத்தில் மட்டும் 40 பில்லியன் டாலர்களை இழந்து உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 29 சதவீதம் குறைந்துள்ளது பின்னடைவை சந்திக்க ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. எலன் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 189 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.