மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 1,200 ஆண்டு பழமையான கல்லறையில் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கப் புதையலையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கி.பி. 750ஆம் ஆண்டு வாக்கில் அந்த பகுதியில் பிரபலமாக இருந்தவருக்கு இந்த கல்லறை கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறிய ஆய்வாளர்கள், எலும்புக்கூடு படிமத்துடன் தங்க அங்கி, பெல்ட், திமிங்கல பல் பதித்த காதணி ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் 32 பேரின் எலும்புக்கூடு படிமங்களையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.