பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பெயரைச் சொன்னதால் ஹமாஸ் பிடியில் இருந்து உயிர் தப்பியதாக 90 வயது மூதாட்டி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் திடீரென ஹமாஸ் படையினர் புகுந்து சுமார் 1,500 பேரைக் கொன்ற நாளில், கிபுட்ஸ் நிர் என்ற இடத்தில் இயந்திர துப்பாக்கிகளுடன் ஹமாஸைச் சேர்ந்த 2 பேர் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த மூதாட்டியை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரைப் பற்றிய விவரங்களை கேட்டனர். தான் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்று கூறிய போதும் கொல்ல எத்தனித்த அவர்களிடம், கால்பந்து வீரர் மெஸ்ஸி பிறந்த ஊர் தான் தனது ஊர் என சொன்னதும் இயந்திரத் துப்பாக்கியை மூதாட்டி கையில் கொடுத்து சிறிய வீடியோவும் எடுத்துக் கொண்ட அவர்கள் வெளியேறியதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.