அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய செவ்வாயன்று ஒரே நேரத்தில் 15 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
குடியரசு கட்சியினரால் சூப்பர் செவ்வாய் என வர்ணிக்கப்படும் இந்த தேர்தலில், அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பா, நிக்கி ஹாலேவா என்பதை தீர்மானிக்க பல லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சாஸ், கொலராடோ, மின்னசோட்டா, வடக்கு கரோலினா, ஆக்லஹாமா, டென்னீஸ், டெக்சாஸ், வெர்மான்ட், விர்ஜினியா போன்ற முக்கிய மாநிலங்களில் இத்தேர்தல் நடைபெறவுள்ளது.