தென் கொரியா நாட்டு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மூன்றரை வயது பாண்டா கரடி ஒன்று, ராஜதந்திர உறவின்படி சீனாவுக்கு ஏப்ரல் மாதம் அனுப்பப்படுகிறது.
அதிஷ்டம் எனப் பெயரிடப்பட்ட அந்த பெண் பாண்டா கரடியை கடைசியாக பொது மக்கள் பார்வையிட அனுமதி தரப்பட்டது. தகவல் கிடைத்த பார்வையாளர்கள், அதிகாலையிலேயே பூங்காவுக்கு வருகை தந்து பாண்டாவை செல்போனில் படமெடுத்தனர்
குட்டியாக இருந்தது முதல் அதனை பராமரித்து வந்த பூங்கா ஊழியரின் காலை பிடித்துக் கொண்டு பாண்டா கரடி அடம்பிடித்ததை பார்வையாளர்கள் கண்டு கண் கலங்கினர்.