வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஏற்பட்ட நெருப்பு அருகில் இருந்த 7 மாடி சொகுசு குடியிருப்புக்கு பரவியது.
அடுத்தடுத்த தளங்களுக்கு தீ வேகமாக பரவியதால் பலர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். 75 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்ட நிலையில், 44 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
சிலர் தண்ணீர் குழாய்களை பிடித்து கீழே இறங்கிவந்தனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.