நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பினால் அது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
அதிபர் தேர்தல் 2 வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய புடின், உக்ரைனை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் மீதும் ரஷ்யா போர் தொடுக்கும் என்பதுபோல் போலி பிம்பம் கட்டமைக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டினார்.
அதை நம்பி ரஷ்யாவை தாக்கும் எந்த ஒரு நாடு மீதும் பதிலடி தாக்குதல் நடத்த ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் புடின் தெரிவித்தார்.