தாய்லாந்தில் இந்தாண்டு இறுதியில் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என கடந்த 2022 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.
சுமார் இருபதாயிரம் கடைகள் அரசு அனுமதி உடன் கஞ்சா விற்க தொடங்கி, அடுத்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாயை வரை விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தடை நீக்கத்தால், குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைத்து அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அந்நாட்டு சுகாதார்த்துறை அமைச்சர், இந்தாண்டு இறுதியில் மீண்டும் தடை விதிக்கப்படும் என அறிவித்தார்.