பாகிஸ்தானில் இருந்து திரும்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எலி இருந்ததால், கொழும்பு விமான நிலையத்தில் 3 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு ஏதேனும் உபகரணங்களை எலி கடித்து வைத்துள்ளதா என முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
எலி இறந்து கிடந்ததாக தெரிவித்த விமான நிலைய அதிகாரி, 3 நாட்களாக விமானம் இயக்கப்படாததால் திட்டமிட்டப்படி விமான சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது 20 விமானங்களை மட்டுமே இயக்கிவருவதாக கூறப்படுகிறது.