ஆப்கானிஸ்தானில் 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆஸ்திரிய நாட்டு சாகச பிரியரை தாலிபான் அரசு விடுதலை செய்தது.
ஆபத்தான நாடுகளுக்குச் செல்வதை வாடிக்கையாக கொண்ட ஹெர்பெர்ட் பிரிட்ஸ், தடையை மீறி ஆப்கான் சென்றார்.
மக்கள் அச்சமின்றி ஆப்கானுக்கு செல்லலாம் என கட்டுரை வெளியிட்ட பிரிட்ஸை உளவு பார்த்ததாக கூறி கடந்தாண்டு மே மாதம் தாலிபான்கள் கைது செய்தனர்.
கத்தார் அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 84 வயதான பிரிட்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.