பல்கேரியாவுக்கு 41 ஆயிரம் டன்கள் உரம் ஏற்றி செங்கடல் வழியாக சென்ற சரக்குக் கப்பல் மீது ஏமனில் இருந்து ஹவுதீ பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கடலில் 29 கிலோமீட்டர் தூரம் வரை எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் சுற்றுச்சூழல் மாசுபட்டிருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்கப்பட்டதையடுத்து கப்பல் குழுவினர் அதை விட்டு வெளியேறியதாகவும் கப்பல் நடுக்கடலில் கைவிடப்பட்டு நிற்பதாகவும் கூறப்படுகிறது.