லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர், திருடுபோன தனது லெக்சஸ் சொகுசு காரை ஜி.பி.எஸ். டிராக்கர் மூலம் தானே கண்டுபிடித்து மீட்டுள்ளார்.
ஜி.பி.எஸ். மூலம் காரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசாரிடம் தெரிவித்தபோது, நீங்களே சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என அலட்சியமாக அவர்கள் பதில் அளித்ததாக அலெக்சாண்ட்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
காருக்குள் போதை மருந்தோ அல்லது கொலை செய்யப்பட்ட யாரோ ஒருவரின் சடலமோ இருந்தால் என்ன செய்வது என அச்சத்துடன் திறந்து பார்த்ததாகவும், உள்ளே எதுவும் இல்லாததால் நிம்மதியாக ஓட்டிசென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.