அமெரிக்காவில் பணத்திற்காக உயிர்த் தோழியை கொலை செய்த 23 வயது பெண்ணுக்கு அலாஸ்கா நீதிமன்றம் 99 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
2019ல் தனது 19 வயது தோழி சைந்தா ஹாப்பமெனை மலைப் பகுதிக்கு அழைத்து சென்று பின்மண்டையில் துப்பாக்கியால் சுட்டு டெனாலி ப்ரெமர் என்ற பெண் கொலை செய்தார்.
இணையதள வழியாக டெனாலியை தொடர்பு கொண்ட ஒருவர், சைந்தாவை கொலை செய்து, படங்கள், வீடியோவை தனக்கு அனுப்பினால் 9 மில்லியன் டாலர் பணம் தருவதாக கூறியதால் கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.