சிறாருக்கான இல்லத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக தண்டிக்கப்பட்ட நபருக்கு மன்னிப்பு வழங்கியதற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக ஹங்கேரி அதிபர் கேட்டலின் நோவக் பதவி விலகினார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், ஹங்கேரிக்கு போப் பிரான்சிஸ் வருகையை முன்னிட்டு சிறார் பாதுகாப்பு இல்ல துணை இயக்குனராக இருந்தவர் உள்ளிட்ட ஒரு டஜன் கைதிகளுக்கு கேட்டலின் பொதுமன்னிப்பு அளித்தார். இந்த நிலையில் அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், தாம் தவறு செய்து விட்டதாக தெரிவித்தார்.