கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக ஒரு நாள் முழுவதும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டது.
அரசு பேருந்துகளும், வாடகை டேக்சிகளும் மட்டுமே இயக்கப்பட்டதால், முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அருகில் உள்ள வனப்பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பொகோட்டா முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததுடன், காற்று மாசு அளவும் பன்மடங்கு அதிகரித்திருந்தது.