இந்தியாவுக்கு 400 கோடி டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை விற்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்று அந்நாட்டு ராணுவ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதி நவீன ராணுவ விமானங்கள், ட்ரோன்கள், ஜிபிஎஸ் கருவிகள், தொலைத்தொடர்பு சென்சார்கள், ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.