ஆஸ்திரேலியாவுக்கு முதன்முதலில் பிரிட்டிஷார் வந்ததை நினைவுகூரும் விதமாக நாளை ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மெல்போர்னில் உள்ள பிரிட்டன் மாகாராணி விக்டோரியா சிலை சிவப்பு பெயிண்டால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கேப்டன் ஜேம்ஸ் குக் தலைமையிலான பிரிட்டிஷ் கடற்படை, கடந்த 1770 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்து, அந்நாட்டை தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வழிவகை செய்தது.
பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வசித்துவந்த பூர்வக்குடி மக்கள், தங்கள் உரிமைகள் பறிபோனதாக கூறி காலனி ஆதிக்கத்தின் சின்னங்களாக கருதப்படும் சிலைகளை சேதப்படுத்திவருகின்றனர்.