ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 74 பயணிகளும் உயிரிழந்ததாக அந்நாடு அறிவித்துள்ளது. விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்தான் என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் ராணுவ விமானம் ஒன்று போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்ய உக்ரைன் சென்றது. அதில் 65 உக்ரைன் போர்க் கைதிகள் மற்றும் 3 காவலர்கள் 6 விமானக்குழுவினர் பயணித்தனர்.
உக்ரைன் எல்லை அருகே பெல்கோராட் மாகாணத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
உக்ரைன் ராணுவம் தாழ்வாகப் பறந்த விமானத்தை 3 ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.