தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு நடுவே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று இருந்ததாக பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
லிடார் எனப்படும் ஒளி ஊடுருவும் கருவியைக் கொண்டு 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை தற்போது வெளியிட்ட அந்நிறுவனம், அங்கு மக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
சுமார் 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதியில் வீடுகள், சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் வீடுகள் மரங்களைக் கொண்டு கட்டப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது