நாய்களை இரைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை தென் கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
நாய்க் கறியைக் கொண்டு தயாரிக்கப்படும் போஷின்தாங் என்ற உணவு வகை தென் கொரியாவில் வயதானவர்களின் விருப்ப உணவாக உள்ள நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டு அமலாகும் புதிய சட்டத்தின் மூலம் நாய்க் கறி உட்கொள்ளும் முறை முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது.
புதிய சட்டத்தின் படி, கறிக்காக நாய்களை வெட்டுபவர்களுக்கு 3 ஆண்டுகளும், நாய்க்கறி விற்றால் 2 ஆண்டுகளும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அண்மையில் அந்நாட்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், நாய்களை கொரிய நாட்டினர் குடும்பத்தில் ஒரு அங்கமாக கருதத் தொடங்கி விட்டதாகவும், குடும்பத்தில் ஒருவரை எப்படி சாப்பிடுவது என்றும் பலரும் கூறி இருந்தனர்.