ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் தொடங்கி மூன்று மாதங்களான நிலையில் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக காசா மாறிவிட்டதாக ஐ.நா. மனிதாபிமான குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மார்டின் க்ரிஃப்த்ஸ், காசாவின் 23 லட்சம் மக்கள் அன்றாடம் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழும் சூழலில் உலக நாடுகள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓரளவு செயல்படும் சில மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும், தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் மார்டின் க்ரிஃப்த்ஸ் கூறியுள்ளார்.
உடனடியாக போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.