வங்க தேசத்தில் ஞாயிறன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மோசடியாக நடத்தப்படுவதாகக் கூறி தேர்தலை புறக்கணித்து முக்கிய எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தினர்.
தலைநகர் டாக்கா அருகே நடைபெற்ற கூட்டத்தில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி உள்ளிட்டவற்றின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி லிட்டு நடுநிலையான இடைக்கால அரசின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகள் புறக்கணித்த போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியும் அதன் ஆதரவு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.