உலகளவில் மின்சார கார் விற்பனையில் கடந்த 3 மாதங்களின் நிலவரப்படி எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சீனாவின் பி.ஒய்.டி. நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் கடந்த 3 மாதங்களில் சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் கார்களை விற்பனை செய்த நிலையில், பி.ஒய்.டி. நிறுவனமோ 5 லட்சத்து 26 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.
மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்க சீன அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்ததால் பி.ஒய்.டி. கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், 2023 ஆம் ஆண்டு முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் டெஸ்லா நிறுவனம், பி.ஒய்.டி. நிறுவனத்தை விட கூடுதலாக 2 லட்சம் மின்சார கார்களை விற்றுள்ளது