சீனாவின் லூனார் புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்வின் போது பட்டாசுகளைக் கொளுத்துவதா கூடாதா என்ற சர்ச்சை அதிகரித்துள்ளது.
சீனாவின் அரசு பிரதிநிதிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிப்பது கடினமானது என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.
காற்று மாசு தடுப்பு சட்டங்கள் மற்றும் தீ விபத்துகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்தும் சீன அரசு ஆலோசித்து வருகிறது.கடந்த 2017ம் ஆண்டு 444 நகரங்களில் பட்டாசுகளை வெடிக்க சீன அரசு தடை விதித்தது.
ஆயினும் தடையை மீறி புத்தாண்டு போன்ற நிகழ்வுகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.