உக்ரைனை நோக்கி செலுத்தப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணை அத்துமீறி போலந்து வான்பரப்பில் நுழைந்ததாக போலந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
மூன்று நிமிடங்கள் மட்டுமே போலந்து வான் பரப்பில் நுழைந்த ரஷ்ய ஏவுகணையை சுட்டு வீழ்த்த போலந்து போர் விமானங்கள் சீறிப்பாய்ந்ததாகவும் அதையடுத்து ரஷ்ய ஏவுகணை உடனடியாக திருப்பி விடப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.