பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
தற்போதைய நிர்வாகம் சரியல்ல என்று ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஈபிள் கோபுரத்தைக் கட்டிய பொறியாளர் குஸ்தாவ் ஈபிளின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 74 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலாத்தலம் வெறிச்சோடி காணப்படுகிறது.