வாடி காஸா என்ற பகுதியில் வசித்துவந்த பாலஸ்தீனர்களை மத்திய காஸாவிற்கு செல்லுமாறு அறிவுறுத்திய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய காஸா மீது பீரங்கித் தாக்குதலை தீவிரப்படுத்தியது கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
முகாம்களில் ஏராளமானோர் தங்கியுள்ள நிலையில், குண்டு மழையால் சேதமடைந்த சாலைகள் வழியாக நிவாரணப் பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம், மக்கள் வெளியுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது என்றும் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.