எதிரி நாட்டு கடற்கரையில், ராணுவ வீரர்களையும், பீரங்கிகளையும் தரையிறக்கும் வசதி படைத்த ரஷ்ய போர்க் கப்பலை ஏவுகணை வீசி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய இந்த போர்க் கப்பல், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஃபிடோஸியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது நள்ளிரவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால், கருங்கடலை ஒட்டிய உக்ரைன் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றுவது தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடலுக்கடியில் ரஷ்யா கட்டியெழுப்பும் படையில் மேலும் ஒரு கப்பல் இணைந்துள்ளதாக கிண்டல் அடித்துள்ளார்.