இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நிவாரண பொருட்களுடன் காஸாவுக்குள் செல்லும் லாரிகளை வைத்து பலரும் தப்பு கணக்கு போடுவதாகவும், அந்த நிவாரண பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்ல கூடுதல் வாகனங்களை இயக்க இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. ஊழியர்கள் 136 பேர் காஸாவில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள குட்டேரஸ், அங்கு அன்றாட நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.