இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் நிலையில், தங்களை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் நிச்சயம் படுதோல்வி அடையும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அபு ஒபைதா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ராணுவ நடவடிக்கை மூலம் இஸ்ரேல் அரசு பிணை கைதிகளை விடுவிக்க முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் கூறியுள்ளார்.
ஹமாஸ் போராளிகள் வசம் 129 பிணை கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வார தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின், கடந்த 20 நாட்களில் 2,000 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது