சீனாவின் கான்சு மாகாணத்தில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கான்சு மற்றும் சிங்ஹை மாகாணங்களை, கடந்த திங்கள் இரவு உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 131 பேர் உயிரிழந்தனர். இரவில் மைனஸ் 15 டிகிரி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு குழுவினர், விடிய விடிய கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
200 சதுரடி பரப்பளவில், ஹீட்டர் மற்றும் மின்சார வசதியுடன் கூடிய இந்த வீட்டில் 4 முதல் 6 பேர் வரை தங்கமுடியும் என அவர்கள் தெரிவித்தனர்.