அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள சேனல் என்ற கடையிலிருந்து இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை முகமூடி அணிந்த ஃபிளாஷ் மாப் கும்பல் கடந்த 17 ஆம் தேதி திருடிச் சென்றுள்ளது.
கவனத்தை திசை திருப்ப பலமுறை தீயணைப்பு கருவியில் இருந்து புகையை வெளியேற்றியதுடன் தடுக்க வந்த பாதுகாப்பு அதிகாரியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வாஷிங்டன் போலீசார் முகமூடி அணிந்த ஃபிளாஷ் மாப் கும்பலை தேடி வருகின்றது.