சீனாவின் கான்ஷு மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுமார் 400 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கான்ஷு மற்றும் குயின்காங் மாகாணங்களில் சுமார் 5000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படியும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சாலைகளும், தொலைத்தொடர்பு இணைப்புகளும் பெரிதும் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டங்களின் உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியே ஓடிவரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.