அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டும் வகையில் விதவிதமான கேக்குகள் உருவாக்கப்பட்டன.
கடல் நீர் மட்ட உயர்வு, பெரு வெள்ளம், கடும் வறட்சி, சூறாவளி பாதிப்பு, அதீத பனிப்பொழிவு போன்றவற்றால் நியூயார்க் நகரின் அடையாளங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காற்று மாசு மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நீர் நிலைகள் மாசுபடுவது, எதிர்பாராத கனமழையால் பெரு நகரங்களில் ஏற்படும் வெள்ளம் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.