கடந்த நவம்பர் மாதம் அகதிகள் நுழைவதைத் தடுக்க மூடப்பட்ட ரஷ்ய எல்லையை பின்லாந்து மீண்டும் திறந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ரஷ்யாவின் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ஹெல்சின்கி நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் பேருந்து புறப்பட்டு சென்றது.
கென்யா, மொராக்கோ,பாகிஸ்தான் சோமாலியா சிரியா மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்த 900 அகதிகள் கடந்த நவம்பர் மாதம் ரஷ்யா வழியாக பின்லாந்திற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து தொடர்ந்து அகதிகள் நுழைவதைத் தடுக்க பின்லாந்து ரஷ்ய எல்லையை மூடியது.