இஸ்ரேல்- ஹமாஸ் போரை தொடர்ந்து இடம் பெயர்ந்துள்ள காசா மக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனுஸ் மருத்துவமனையில் வார்டுகள் அனைத்தும் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், மோசமான சுகாதார நிலைமைகள் , உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் இளைஞர்களிடையே அதிக நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.
இடம் பெயர்ந்த பாலஸ்தீனர் கள் தங்கியுள்ள பள்ளிகளில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுவதால் அங்கும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.