காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட அவசரகால அமர்வில், இந்தியா உட்பட 153 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உட்பட 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
அமர்வின்போது, மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து பணயக் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.