ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான டன் மத்தி மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர்.
எதாவது பெரிய மீன்கள் துரத்தி, கூட்டமாக தப்பிச் சென்றபோது, இட நெருக்கடியால் மூச்சு திணறி இறந்திருக்கலாம் எனவும், அல்லது வெப்பமான நீர் பரப்பிலிருந்து குளிர்ந்த நீர் பரப்புக்கு இடம் பெயர்ந்ததால் இறந்திருக்க கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர். உறுதிபட சொல்லமுடியாததால் இறந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், புகுஷிமா அணு உலை கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டதால் மீன்கள் மடிந்திருக்கலாம் என பொதுமக்களில் சிலர் அச்சம் தெரிவித்தனர்.