காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் தீர்மானத்தின் மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
போர் நிறுத்தத்துக்கான சர்வதேச நாடுகளின் அழைப்புகளை தொடர்ந்து எதிர்த்து வரும் வீட்டோ அதிகாரத்தை வைத்துள்ள அமெரிக்கா இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க கூடும் என கருதப்படுகிறது. காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையில் நேற்றும் பாலஸ்தீனர்கள் பலர் பலியாகி உள்ளனர்.